86 வயதில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு உலக சாதனை படைத்த முதியவர்!
டெர்பிஷயர் நாட்டை சேர்ந்த 86 வயதான முதியவர் பளு தூக்கும் போட்டியில் தேசிய மற்றும் உலக சாதனையை படைத்துள்ளார்.
உலக சாதனை
டெர்பிஷ்யர் நாட்டை சேர்ந்த 86 வயதான பிரையன் வின்ஸ்லோ(Brian Winslow) என்பவர், கடந்த மார்ச் 18 அன்று பிரித்தானியாவின் போதைப் பொருள் தடுப்பு பவர் லிப்டிங் அசோசியேஷன்(BDFPA) நடத்திய பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
இதில் deadlift பிரிவில் 77.5 கிலோ எடையை தூக்கியுள்ளார். deadlift என்பது எந்த வித மேசை மற்றும் உபகரணங்களை பயன்படுத்தாமல் நின்று கொண்டே எடையை தூக்கும் போட்டி ஆகும்.
@bbc
வின்ஸ்லோவின் வயது மற்றும் அவரது உடல் எடை பிரிவில் 78 கிலோ எடையை தூக்கியது, பிரித்தியானியாவில் இது வரை முறியடிக்கப்படாத சாதனை ஆகும்.
தொடர்ந்து மூன்று முறை பளு தூக்கும் போது டெர்பிஷையரை சேர்ந்த வின்ஸ்லோ 78 கிலோ எடையைத் தூக்கி புதிய சாதனையை படைத்துள்ளார்.
@bbc
பிரித்தானியாவின் நியூ மில்ஸிலிருந்து வந்திருந்த பளு தூக்கும் வீரரை விட அதிகமான எடைகளை தூக்கி 78 கிலோ பிரிவில் வின்ஸ்லோ வென்றுள்ளார்.
சாகும் வரை கலந்து கொள்வேன்
85 முதல் 89 வயதுக்கு உட்பட்ட ஆண் போட்டியாளர்களுக்கான 60 கிலோ பிரிவில் திரு வின்ஸ்லோ தேசிய மற்றும் உலக சாதனை படைத்துள்ளார் என BDFPA உறுதிப்படுத்தியுள்ளது.
@getty images
”ஒன்று அல்லது இரண்டு முறை அதிக எடையை தூக்குவது நல்லது. ஆனால் நான் களைத்து விட்டேன். இந்த போட்டியில் வென்றதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்."
எனது குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளை போல பளு தூக்குதலும் எனது வாழ்வின் ஒரு அங்கம் தான். என் உடல் அனுமதிக்கும் வரை நான் தொடர்ந்து போட்டியில் கலந்து கொள்வேன்” என புன்னகையுடன் வின்ஸ்லோ கூறியுள்ளார்.
@bbc
இடுப்பு உயரத்திற்கு எடையை உயர்த்தி, எடையை தூக்கும் deadlift பிரிவில் ”வின்ஸ்லோ வெறித்தனமாக செயல்பட்டார்” என அங்கு பார்வையாளராக வந்திருந்த ஜென் பௌத்தர் ஒருவர் கூறியுள்ளார்.