88 வகையான உணவுகளை கிருஷ்ணருக்கு படைத்த பெண்!
கோகுலாஷ்டமியை முன்னிட்டு 88 வகையான உணவுகளை மங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கிருஷ்ணருக்கு படைத்து வழிப்பட்டுள்ளார். இந்த செய்தியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
88 வகையான உணவு
கிருஷ்ணன் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.
கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால்திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபாடு செய்வார்கள்.
அந்தவகையில் இருதய நோய் நிபுணரான டாக்டர் பி.காமத் என்பவரிடம் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர் 88 வகையான உணவுகளை சமைத்து படைத்துள்ளார்.
Proud of her and her devotion to lord Krishna. She is my patient. She has again broken her previous record. 88 dishes were prepared last night for Gokulashtami. #janamashtami pic.twitter.com/SDoh3JKTvM
— Dr P Kamath (@cardio73) September 7, 2023
இந்த புகைப்படத்தை வைத்தியர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவி செய்துள்ளதார். இந்த பதிவானது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |