நாயுடன் தீயில் கருதி உயிரிழந்த பிரித்தானிய முதியவர்: துயர சம்பவம்
சைப்ரஸில் உள்ள விலங்குகள் காப்பகத்திற்கு சென்றுகொண்டிருந்த பிரித்தானிய முதியவர், காரில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்தார்.
பிரித்தானிய முதியவர்
88 வயதான பிரித்தானிய முதியவர் ஒருவர், சைப்ரஸின் தெற்குக் கடற்கரைக்கு அருகில் உள்ள பச்னாவில் உள்ள தனது வீட்டில் இருந்து, ஃபமகுஸ்டா மாவட்டத்தில் உள்ள ஒரு நாய் காப்பகத்தை பார்வையிட சென்றுள்ளார்.

தனது நாயுடன் அவர் 138 கிலோ மீற்றர் தூரம் காரில் பயணம் செய்துள்ளார். அவர் சென்ற கார் வழி தவறியதால் சேற்றில் சிக்கிக்கொண்டதாக நம்பப்படுகிறது.
அப்போது காரில் இருந்து சிதறிய தீப்பொறிகள், அருகிலிருந்த காய்ந்த நாணல்களைப் பற்றவைத்து காரை தீ முழுவதுமாக சூழ்ந்துள்ளது. இதில் காரில் தனது நாயுடன் சிக்கிக்கொண்ட முதியவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உதவி தேடுமாறு
அவர் வாகனத்தில் இருந்து பலமுறை தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் அவருடன் பயணித்த பெண் பராமரிப்பாளர் தப்பித்து, அவரை வாகனத்தை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியதாக காவல்துறையிடம் கூறியிருக்கிறார்.
அதற்கு பதிலாக, குறித்த முதியவர் தன்னை விட்டுவிட்டு உதவி தேடுமாறு அவரிடம் கூறியதாக, அவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தீ கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, அவசரகால சேவையினர் அந்த நபரின் உடலை காருக்கு அருகில் கண்டெடுத்தனர். அவரது நாயும் இந்தத் தீ விபத்தில் உயிரிழந்திருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |