மணிக்கு 191 கிலோமீற்றர் வேகத்தில் கார் ஓட்டிய 88 வயது முதியவர்: பொலிசாரை வாயடைக்கவைத்த காரணம்
பிரான்சில் மணிக்கு 191 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கார் ஒன்றை பொலிசார் தடுத்து நிறுத்தினர்.
அந்த காரை ஓட்டியவர் யார் என்று பார்த்தால், அவர் ஒரு 88 வயது முதியவர். ஏன் இப்படி இந்த தள்ளாத வயதில், இவ்வளவு வேகமாக கார் ஓட்டிச் செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் கூறிய பதிலைக் கேட்டு பொலிசார் வாயடைத்துப்போனார்கள்.
தான் கொரோனா தடுப்பூசி போடச் செல்வதாகவும், அதற்கு தாமதமாகிவிட்டதாலேயே தான் அவ்வளவு வேகமாக சென்றதாகவும் கூறியுள்ளார் அந்த முதியவர்.
எரிச்சலடைந்த பொலிசார், அவரது ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்ததோடு, அவரது காரையும் பிடுங்கிச் சென்றுவிட்டார்கள்.
உங்களுக்கு 60 வயதுக்கு மேல் ஆனாலும் சரி, ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தாலும் சரி, யாரென்றாலும் மற்றவர்களின் பாதுகாப்பு கருதியாவது வேகக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும் என்று கூறிவிட்டார்கள் பொலிசார்.