82 வயது மனைவியிடம் விவாகரத்து கேட்ட 89 வயது முதியவர்: தீர்ப்பில் நடந்த சுவாரஸ்யம்
82 வயது மனைவியிடம் விவாகரத்து கேட்டு 89 வயது முதியவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் விவாகரத்து
இந்தியா, சண்டிகரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவர், 1963 -ம் ஆண்டு பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களது வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, 1984 -ம் ஆண்டு விமான படை அதிகாரி சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு ராணுவ வீரராக பணியாற்றினார். அப்போது, இந்த தம்பதியர் உறவில் விரிசல் ஏற்பட்டு, விவாகரத்து கேட்டு மாவட்ட நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இதனை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
ஆனால் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்தது. இந்நிலையில், 82 வயது மனைவியிடம் விவாகரத்து கோரி 89 வயதான முதியவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றம் தீர்ப்பு
இதற்கு, மனைவி தரப்பிலும் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் அந்த மனுவில், "என் கணவரை நான் பார்த்துக் கொள்கிறேன். அவரை விட்டு பிரியும் திட்டம் ஏதும் இல்லை. நான் இறக்கும் போது விவாகரத்து பெற்றவளாக இறக்க விரும்பவில்லை" என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அணிருத்தா போஸ், பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, 89 வயது முதியவருக்கு விவாகரத்து வழங்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |