பூமியை நோக்கி வரும் 890 அடி அகலமுள்ள அபாயகரமான சிறுகோள்: நாசா கூறும் தகவல்
சுமார் 890 அடி விட்டம் கொண்ட, அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
பூமியை நோக்கி வரும் அபாயகரமான சிறுகோள்
2008 OS7 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.41 மணிக்கு நமது கிரகத்தை 1,770,000 மைல் தொலைவில் கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது.
அபாயகரமான அந்த சிறுகோள், சுமார் 890 அடி விட்டம் கொண்டதாகும். என்றாலும், அந்த சிறுகோள் பூமியின்மீது மோதும் அபாயம் இல்லை என்கிறது நாசா.
stock image
Dr Minjae Kim என்னும் அறிவியலாளர் இது குறித்துக் கூறும்போது, இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் வருவதுபோல் தோன்றினாலும், அது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையாது என்பதால், அதைக்குறித்து அதிகம் கவலைப்படவேண்டியதில்லை என்கிறார்.
நமது சூரிய அமைப்பில், அபாயகரமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 2,350 சிறுகோள்கள் உள்ளன என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |