லண்டனில் 890 பேர் அதிரடியாக கைது! பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் போராட்டம்!
லண்டனில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் 890 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனில் போராட்டம்
பாலஸ்தீன அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை லண்டனில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோர் நாடாளுமன்ற சதுக்கத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
லண்டன் பெருநகர காவல்துறையின் தகவலில், போராட்டத்தில் ஈடுபட்ட 890 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 857 பேர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், 33 பேர் வேறு சில குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 பேரில் 17 பேர் காவல்துறை அதிகாரிகளை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட பலர் கைது செய்யப்பட்ட போதிலும், இதனை ஏற்பாடு செய்த defend our juries என்ற அமைப்பு, இதனை அமைதியாக நடந்த போராட்டம் எனவும் இது ஒரு எடுத்துக்காட்டு என்றும் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |