பென்சிலால் ஏற்பட்ட பிரச்சனை - 8ஆம் வகுப்பு மாணவரை வெட்டிய சக மாணவர்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி 4 நாள் விடுமுறைக்கு பிறகு, இன்று வழக்கம் போல் இயங்க தொடங்கியது.
பள்ளியில் அரிவாள் வெட்டு
அப்போது 8ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர், வகுப்பறையில் வைத்து தனது பள்ளிக்கூட பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, சக மாணவரை வெட்டியுள்ளார்.
இதனை தடுக்க முயன்ற இரு ஆசிரியர்களுக்கும், காயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவனுக்கு தலை, தோள்பட்டை, முதுகு பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் ஆசிரியர்கள் இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரிவாளால் வெட்டிய மாணவரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு, காவல் ஆணையர் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார்.
முதற்கட்ட விசாரணையில், பென்சில் கொடுக்கல் வாங்கலில் மாணவர்கள் இருவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிக்கு வந்த மாணவன், இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |