9/11 தாக்குதல்கள்: ஜேர்மன் பாதுகாப்பு அமைப்பையே மாற்றி அமைத்த விடயம்
September 11 attacks: Three of the four suspected hijackers had lived in Hamburg: அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் திகதி தாக்குதல் நிகழ்த்தியவர்களில் மூன்று பேர் ஜேர்மனியில் வாழ்ந்தவர்கள் என்பது பின்னர் தெரியவந்தது.
அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் திகதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 25 ஆண்டுகள் ஆகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் நிகழ்ந்த அந்த தாக்குதல்களுக்கும், ஜேர்மனிக்கும் உள்ள தொடர்பு குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
9/11 தாக்குதல்கள்
அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் திகதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய இரட்டைக் கோபுரத் தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களைக் கண்டு உலகமே மிரண்டு நின்றபோது, ஜேர்மனியும் அந்த நிலையில்தான் இருந்தது.
ஆனால், அடுத்து வெளியான செய்தி ஜேர்மனியை அதிரவைத்தது. ஆம். விமானங்களைக் கடத்தி கட்டிடங்கள் மீது மோதியவர்களில் முக்கியமான மூன்று பேர் ஜேர்மனியில் வாழ்ந்தவர்கள் என்னும் செய்திதான் அது.

Mohamed Atta, Marwan al-Shehhi மற்றும் Ziad Jarrah என்னும் அந்த மூவரும், பல ஆண்டுகளாக திட்டமிட்டு, ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் முறைப்படி கல்வி கற்று, பின் அமெரிக்கா சென்று விமான பயிற்சி பெற்று, அந்த தாக்குதலை நிகழ்த்தியது உறுதியானது.
அதைத் தொடர்ந்து, ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
தாக்குதல் நிகழ்ந்து சில வாரங்களில், ஜேர்மனியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் பல கொண்டுவரப்பட்டன.
பொலிசாருக்கும் உளவுத்துறையினருக்கும் கூடுதல் அதிகாரங்கள் கையளிக்கப்பட்டன. பல்வேறு மத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும் நிலை உருவானது. ஆக மொத்தத்தில் ஜேர்மன் பாதுகபபு அமைப்பே மாறிவிட்டது!
2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி, அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தபோது, ஜேர்மன் ஜனாதிபதியான ஜோஹன்னஸ் ராவ் உரைத்த வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன: ‘இந்த நாள் உலகையே மாற்றிவிட்டது’ என்று கூறியிருந்தார் அவர். அவர் கூறியது ஜேர்மனிக்கும் பொருந்தும்!