தொடங்கிய 9 தொழிலும் நஷ்டத்தில்... தற்கொலையில் இருந்து மீண்டவரின் இன்றைய சொத்து மதிப்பு ரூ 16,000 கோடி
பழைய உலோக வணிகத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்து, இன்று ரூ 99484 கோடி மதிப்பிலான சுரங்கம் மற்றும் உலோக சாம்ராஜியம் ஒன்றையே உருவாக்கியுள்ளார் அனில் அகர்வால்.
சொத்தில் 75 சதவிகிதத்தை தொண்டு நிறுவனங்களுக்கு
வேதாந்தா குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் தான் அனில் அகர்வால். தனது சொத்தில் 75 சதவிகிதத்தை தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதாக உறுதி அளித்திருப்பவர்.
1976ல் அனில் அகர்வாலின் தந்தை நடத்தி வந்த அலுமினிய கடத்தி உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வெளியேறி, சொந்தமாக தொழில் தொடங்க முன்னெடுத்த சிறு முயற்சியில் இருந்து தான் தற்போதைய வேதாந்தா குழுமம் உருவானது.
மும்பை நோக்கி பயணப்பட்டவர் முதலில் பழைய உலோக வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். அதுவே பின்னர் தாமிரம், துத்தநாகம், அலுமினியம் மற்றும் இரும்பு தாது ஆகியவற்றில் ஒரு சாம்ராஜியத்தையே நிறுவ காரணமாக அமைந்துள்ளது.
பீகரின் பாட்னா நகரில் ஒரு மார்வாடி குடும்பத்தில் பிறந்த அனில் அகர்வால், தமது 19வது வயதில் தந்தையின் தொழிலை விரிவுபடுத்த முடிவு செய்தார். இதன் பொருட்டு, தொழில் வாய்ப்புகள் தேடி மும்பை நோக்கி பயணப்பட்டார்.
நெருக்கடியில் தற்கொலை முடிவுக்கு
15 வயதில் இருந்தே தந்தையுடன் வணிகத்தில் ஈடுபட்டு வந்த அனில் அகர்வால், மும்பை சென்றதன் பின்னர் 9 தொழில்கள் தொடங்கி, பெரும் இழப்பை எதிர்கொண்டார். 30 வயதுக்கு பின்னரும் தொழில் இழப்புகளால் நெருக்கடிக்கு உள்ளானர்.
கடும் நெருக்கடியில் தற்கொலை முடிவுக்கும் தள்ளப்பட்டார். ஆனால் அதில் இருந்து படிப்படியாக மீண்டவர் சுரங்க தொழிலில் களமிறங்கினார். அதுவே அவருக்கு பெரும் நம்பிக்கை மற்றும் வளர்ச்சியை அள்ளிக்கொடுத்துள்ளது.
2003ல் லண்டன் பங்குச்சந்தையில் முதல் இந்தியராக தமது நிறுவனத்தை பதிவு செய்துள்ளார் அனில் அகர்வால். வேதாந்தா குழுமத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 99484 கோடி என்றே கூறப்படுகிறது.
அனில் அகர்வாலின் மொத்த சொத்து மதிப்பு ரூ 16,713 கோடி என்றும் வெளியான தரவுகளில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 13 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்புடைய Sterlite ஆலையும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமானது தான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |