பொதுமக்கள் சாகட்டும், பரவாயில்லை என கூறியதாக ரிஷி மீது குற்றச்சாட்டு: ஆதாரங்கள் வெளியானது...
கோவிட் காலகட்டத்தில் பிரித்தானிய அரசாங்கம் அதைக் கையாண்டவிதம் குறித்த விசாரணை ஒன்று நடைபெற்றுவருகிறது. அந்த விசாரணையில், அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன், நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகியோர் தெரிவித்த சில விடயங்களை, அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர், விசாரணைக் குழு முன் வெளியிட்டுள்ளார்.
Eat Out to Help Out திட்டம்
திடீரென கோவிட் என்னும் ஒரு புதிய பிரச்சினை உலகை தாக்கியபோது, உலக நாடுகள் எதுவுமே அதை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. கோவிட் ஏராளம் உயிர் பலி வாங்கியது மட்டுமல்ல, பொருளாதார ரீதியிலும் நாடுகளை கடுமையாக பாதித்தது.
அந்த காலகட்டத்தில், அதாவது, 2020ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வாக்கில், பலத்த அடி வாங்கியிருந்த உணவகத் துறைக்கு ஆதரவளிப்பதற்காக, வேறு விதத்தில் கூறினால், பொருளாதாரத்தை அல்லது வருவாயை சற்று மேம்படுத்த, அப்போது நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
Yahoo News UK
அதன் பெயர், Eat Out to Help Out திட்டம். அதாவது, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்காமல் வெளியே சென்று உணவகங்களில் உணவு உண்ணலாம், தள்ளுபடியும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
ரிஷி எதிர்பார்த்தபடியே, இத்திட்டம் பொருளாதார ரீதியில் நல்ல பலனைக் கொடுத்தது. ஆனால், மக்கள் வெளியே நடமாடத் துவங்கியதால், கோவிட் தொற்று அதிகரித்தது!
பொதுமக்கள் சாகட்டும், பரவாயில்லை
அந்த காலகட்டத்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பிரித்தானிய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்த Sir Patrick Vallance, பிரதமர், நிதி அமைச்சர் முதலான தலைவர்களின் கருத்துக்களை குறிப்பெடுத்துள்ளார்.
அப்போது, பிரித்தானியாவில் பொதுமுடக்கம் அறிவிக்க அறிவியல் ஆலோசகர்கள் பரிந்துரைக்க, அதனால் பிரித்தானிய பொருளாதாரம் பாதிக்கப்படும் என அமைச்சர்கள் கவலைப்பட்டார்களேயொழிய, மக்கள் கோவிடால் உயிரிழப்பார்கள் என்பதைக் குறித்து கவலைப்படவில்லை என்று கூறியுள்ளார் Sir Patrick Vallance.
Financial Times
ஆக, பொதுமுடக்கம் அறிவிப்பதற்கு பதிலாக, மக்களை வெளியே சென்று உணவகங்களில் சாப்பிட அனுமதிப்பதால் கோவிட் தொற்று அதிகமாகும், உயிரிழப்புகள் ஏற்படும் என அறிவியல் ஆலோசகர்கள் ஆலோசனை கூறியபோது, அப்போதைய நிதி அமைச்சரும், தற்போதைய பிரதமருமான ரிஷி சுனக், மக்கள் சாகட்டும், பரவாயில்லை என கூறியதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சில ஊடகங்கள், மக்கள் செத்தாலும் பரவாயில்லை என ரிஷி எண்ணியதாக Sir Patrick Vallance கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அது பிரித்தானிய அரசியலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Image: Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |