கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநில கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்காவில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் அமைந்துள்ளது.

பிரபலமான கோவில் என்பதால், தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். இன்று ஏகாதசி என்பதால், வழக்கத்தை விட அதிகமான கூட்டம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே மாநில வேளாண் அமைச்சர் கே. அச்சன்நாயுடு கோயிலுக்கு வந்து நிலைமையை மீட்புப்பணியை துரிதப்படுத்தி வருகிறார்.
శ్రీకాకుళం జిల్లాలోని కాశీబుగ్గ వెంకటేశ్వర ఆలయంలో తొక్కిసలాట ఘటన కలచివేసింది. ఈ దురదృష్టకర ఘటనలో భక్తులు మరణించడం అత్యంత విషాదకరం. మృతుల కుటుంబాలకు ప్రగాఢ సానుభూతిని తెలియజేస్తున్నాను. గాయాల పాలైన వారికి మేలైన సత్వర చికిత్స అందించాలని అధికారులను ఆదేశించాను. ఘటనా స్థలానికి వెళ్లి…
— N Chandrababu Naidu (@ncbn) November 1, 2025
இந்த துயர சம்பவத்திற்கு மாநில முதல் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |