9 மாதங்களில் 16 இளையோர்களை பலி வாங்கிய லண்டன்: வெளிவரும் பகீர் பின்னணி
லண்டனில் 15 வயது பாடசாலை மாணவி உட்பட இந்த 9 மாதங்களில் இதுவரை 16 இளையோர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 9 மாதங்களில்
தெற்கு லண்டனின் குரோய்டன் பகுதியில் 15 வயது பாடசாலை மாணவி கத்தியால் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். தமது தோழிக்கும் அவரது முன்னாள் காதலனுக்குமான சண்டக்கு நடுவே சிக்கிக் கொண்ட அந்த மாணவியே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
From X
குறித்த சம்பவமானது தடம் எண் 60 பேருந்தில் நடந்துள்ளது. பகல் 8.30 மணியளவில் நடந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தவும், சுமார் 9.21 மணிக்கு அவர்களும் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் 17 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது பொலிஸ் காவலில் உள்ளார். இந்த நிலையிலேயே, லண்டனில் இந்த 9 மாதங்களில், மொத்தம் 16 இளையோர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஏப்ரல் மாதம் கட்டிடத்திற்கு நெருப்பு வைக்கப்பட்டதில், சிக்கிக்கொண்ட 15 வயது Tiffany Regis பரிதாபமாக மரணமடைந்தார். இந்த வழக்கில் 16 வயது சிறுவன கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உரிய நடவடிக்கை
வடக்கு லண்டனில் இசை காணொளி பதிவின் போது 15 வயது Leonardo Reid கத்தியால் தாக்கி கொல்லப்பட்டார். ஜூலை 4ம் திகதி இரவு சுமார் 11.30 மணியளவில் காயங்களுடன் குற்றுயிராக மீட்கப்பட்ட அவர், நள்ளிரவு கடந்த நிலையில் மரணமடைந்தார்.
@pa
23 வயது Klevi Shekaj கத்தியால் தாக்கப்பட்ட காயங்கலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். குரோய்டன் தாக்குதல் சம்பவத்தில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றே பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலும், சம்பவம் நடந்து 75 நிமிடங்களுக்குள் தாக்குதல்தாரியை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |