இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது.
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் என்பது ஏப்ரல்15 முதல் ஜுன் 14 வரை ஆகும்.
2 மாதங்கள் முடிந்து மீனவர்கள் கடலுக்குள் சென்றனர், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்றனர்.
நேற்று முன்தினம் அதிகாலை நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கலையரன் என்பவரது விசைப்படகு பழுதாகி நின்றது.
அந்நேரம் ரோந்துக்கு வந்த இலங்கை கடற்படையினர் மொத்தம் 9 மீனவர்களை கைது செய்தனர்.
அந்தோணி ஜான்சன், சேசுராஜ், மரிய ரூபன், முத்து, அந்தோணி பிரபு, லெனின், ஜேக்கப், ஜேம்ஸ் பிரதீப், அந்தாணி ஆகியோரை கைது செய்யப்பட்டவர்கள்.
இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |