கொலைக்களமாகும் லண்டன் நகரம்... பதறவைக்கும் சம்பவங்களின் விரிவான பின்னணி
கடந்த ஆண்டைவிடவும் எண்ணிக்கை குறைவு என்றாலும், ஒவ்வொரு உயிரும் முக்கியத்துவம் வாய்ந்தது
பெக்கன்ஹாம் பிளேஸ் பூங்காவில் தனது காரில் அமர்ந்திருந்த ஜெரேமியா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டார்
பிரித்தானிய தலைநகர் லண்டனில் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் சமூக ஆர்வலர்கள். லண்டன் நகரில் இந்த ஆண்டில் இதுவரை 9 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டைவிடவும் எண்ணிக்கை குறைவு என்றாலும், ஒவ்வொரு உயிரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றே குறிப்பிடுகின்றனர். கடந்த பிப்ரவரி 7ம் திகதி வடக்கு லண்டனில் உள்ள என்ஃபீல்டில் 18 வயது இளைஞர் டோனோவன் ஆலன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் சம வயது இளைஞர் Timothy Adeoye மீது கொலை வழக்கு பதியப்பட்டது. மார்ச் மாதம் 14ம் திகதி கிழக்கு லண்டனில் பள்ளி பேருந்தில் 16 வயதான டைலர் ஹர்லி கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். கார்ல்டன் தனுவே என்ற அமெச்சூர் குத்துச்சண்டை வீரர் சமையலறை கத்தியால் குறித்த இளைஞரை மார்பில் குத்தியதாக கூறப்படுகிறது.
மார்ச் 19ம் திகதி சபிதா தன்வானி என்ற 19 வயது பல்கலைக்கழக மாணவியை கழுத்தில் காயப்படுத்தி இறப்புக்கு காரணமாகியுள்ளார் 22 வயதான மஹர் மரூஃப் என்ற இளைஞர்.
நியூ கிராஸில் உள்ள ஃபோர்தாம் பூங்காவில் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கபட்டார் 16 வயதேயான டீயோன். இந்த கொலை வழக்கில் 15 வயதுடைய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஏப்ரல் 4 ம் திகதி பிரிக்ஸ்டன், ஹிக்கன் சாலையில் 16 வயதேயான ரோம்மல் கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

மே 10 அன்று 17 வயது இளைஞன் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டது. ஜூன் 18 சனிக்கிழமையன்று, 17 வயதான அலி பேகோரன், டோட்டன்ஹாமில் உள்ள ஆர்ச்சர்ட் லேனில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். 15 வயது இளைஞன் கொலை செய்ததாக மறுநாள் குற்றம் சாட்டப்பட்டான்.
ஜூலை 16 சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு, ப்ரோம்லி பெருநகரத்தின் எல்லைக்கு அருகில் லூயிஷாமில் உள்ள பெக்கன்ஹாம் பிளேஸ் பூங்காவில் தனது காரில் அமர்ந்திருந்த ஜெரேமியா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டார். இந்த வழக்கில் 19 மற்றும் 18 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஆகஸ்ட் 4 ம் திகதி இரவு 9 மணிக்கு முன்னதாக இஸ்லிங்டனில் உள்ள ஹைபரி ஃபீல்ட்ஸில் 15 வயது டெஷான் ஜேம்ஸ் டுயிட் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். ஆகஸ்ட் 10 ஆம் திகதி, சந்தேகத்தின் பேரில் 15 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான்.

ஆகஸ்ட் 6 ம் திகதி லெய்டன்ஸ்டோனில் உள்ள ஹை ரோட்டில் 18 வயதேயான குலாம் சாதிக் என்ற இளைஞர் பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டதில் உயிர் இழந்தார்.
இந்த வழக்கில் ஆகஸ்ட் 11ம் திகதி 17 வயது சிறுவனை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ள பொலிசார் விசாரணைக்கு பின்னர் கொலை வழக்கு பதிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        