வலுப்பெற்ற புயல் சின்னம்.., 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 880 கிலோமீட்டர் தூரத்திலும் சென்னையின் தெற்கு தென்கிழக்கே 1,050 கி.மீ தூரத்தில் உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த இரு நாள்களில் மேற்கு - வடமேற்கு திசையில் தமிழ்நாடு - இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மாலைக்கு பின், மழை படிப்படியாக அதிகரிக்கும்.
தமிழகத்தில் இன்று முதல் 29ஆம் திகதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக சென்னை, கடலூர் நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால்,பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |