9 வயது சிறுமியை கடத்திய சொந்த மாமா: ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்: பொலிஸார் அதிரடி
அசாம் மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்களால் 9 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தப்பட்ட 9 வயது சிறுமி
அசாம் மாநிலத்தின் ஜோர்காட் மாவட்டத்தில் 9 வயது சிறுமி உறவினர்களால் கடத்தப்பட்ட நிலையில், சிறுமியை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மாரியானி பகுதியில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் தேர்கான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது?
பொலிஸார் வெளியிட்ட தகவலின் படி, சிறுமியின் தாய் மாமா சாகர் கோஷ் மற்றும் அவரது மனைவி மனிஷா கோஷ் தம்பதி மாரியானி உள்ள லோக்நாத் பவனில் அறையை வாடகை எடுத்து மூன்று நாட்கள் தங்கியுள்ளனர்.
அங்கிருந்து உறவினர் வீட்டிற்கு சென்ற அந்த தம்பதி, பொய்யான காரணங்களை கூறி சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளனர்.
சிறுமி பல மணி நேரங்கள் ஆகியும் வீடு திரும்பாததை அடுத்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாலை 5 மணியளவில் குடும்பத்தை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் ரூ.60 லட்சம் பிணைத் தொகையாக கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனை காவல் துறையினருக்கு தெரிவித்தால் சிறுமியை கொன்று விடுவதாகவும், பணத்தை இரவு 8 மணிக்குள் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.

காவல்துறையினர் அதிரடி
கடத்தல்காரரின் மிரட்டல்களுக்கு பயப்படாமல் தந்தை உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
உடனே விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், தேர்கான் பகுதியில் உள்ள இஸ்லாம்கர் பகுதியில் இருந்து இரவு 2 மணியளவில் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் சிறுமியின் மாமா சாகர் கோஷ் கொய்லகடாவிலும், அவரது கூட்டாளி வாசிம் ரஹ்மான் இஸ்லாம்கரிலும் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
அத்துடன் தலைமறைவாக உள்ள குற்றவாளியை கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |