அடுத்து என்ன என்று தெரியாமலே பிரித்தானியாவில் 90,000 புகலிடக்கோரிக்கையாளர்கள்
பிரித்தானியாவில் இதற்கு முன் ஆட்சி செய்த ரிஷி சுனக் அரசு கொண்டுவந்த சட்டத்தைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் 90,000 புகலிடக்கோரிக்கையாளர்கள் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமலே பிரித்தானியாவில் தவித்துவருகிறார்கள்.
ரிஷி சுனக் அரசு கொண்டுவந்த சட்டம்
ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசு, சட்டவிரோத புலம்பெயர்தல் சட்டம் என்னும் ஒரு சட்டத்தை 2023ஆம் ஆண்டு அமுல்படுத்தியது.
அச்சட்டத்தின்படி, பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைவோர், பிரித்தானியாவில் வாழமுடியாது. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கோ அல்லது பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒன்றிற்கோ நாடுகடத்தப்படுவார்கள்.
90,000 புகலிடக்கோரிக்கையாளர்கள்
அத்துடன், புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நட்டுக்கு அனுப்பி, அவர்கள் அங்கிருக்கும்போது அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிக்கவும் திட்டமிட்டார் ரிஷி.
அதற்கு கடும் எதிர்ப்பு உருவானது. எக்கச்சக்கமாக பணம் செலவழித்தும் அத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
ஆக, புகலிடக்கோரிக்கைகளின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படாமல், ருவாண்டாவுக்கும் அனுப்பப்படாமல், அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமலே சுமார் 90,000 புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவில் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துவந்துள்ளனர்.
புதிய பிரதமரின் அறிவிப்பு
பிரித்தானியாவில் புதிதாக பதவியேற்ற லேபர் கட்சியைச் சேர்ந்த கெய்ர் ஸ்டார்மர், தான் தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததுபோலவே, ருவாண்டா திட்டத்தை ரத்து செய்துவிட்டார்.
அத்துடன், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போயிருக்கும் 90,000 புகலிடக்கோரிக்கையாளர்களின் புகலிடக்கோரிக்கைகள் பரிசீலனை விரைவில் துவங்கும் என்றும் ஸ்டரமர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |