மேம்பாலத்தில் 90 டிகிரி கோணத்தில் வளைவு.., விபத்து ஏற்பட அபாயம் என எதிர்ப்பு
மத்தியப் பிரதேசம் போபாலில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் வருகின்றன.
மேம்பாலத்தில் வளைவு?
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், ரூ.18 கோடியில் ரயில்வே மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்டது.
இந்த மேம்பாலத்தில் உள்ள வளைவில் திரும்புவதற்கு 45 டிகிரி வளைவாக இல்லாமல் 90 டிகிரி கோணத்தில் திரும்பும்படியான வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இதன் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், இந்த மேம்பாலத்திற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில், இந்த பிரச்சனை குறித்து ஆராய்வதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் உறுதியளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |