அமெரிக்காவின் 3-வது பாரிய சிலையாக அமைக்கப்பட்ட பிரமாண்ட அனுமன் சிலை.!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிரமாண்ட அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
90 அடி உயரம் கொண்ட இந்த சிலை ஹூஸ்டன் அருகே திறக்கப்பட்டது.
ஹூஸ்டனில் உள்ள இந்த சிலை. இது பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் தெரியும். இது அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சிலையாகும்.
புளோரிடாவின் ஹாலண்டேலா கடற்கரையில் உள்ள சுதந்திர தேவி சிலை (151 அடி) மற்றும் பெகாசஸ்-டிராகன் (110 அடி) சிலை ஆகியவை முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
Sugar Land-ல் உள்ள அஷ்ட லட்சுமி கோவிலில் அனுமன் மூர்த்தியின் சிலை திறக்கப்பட்டது. இது ஆகஸ்ட் 15 முதல் 18 வரை நடைபெற்ற விழாவின் போது திறக்கப்பட்டது.
சீதையையும் ராமரையும் ஒன்றிணைப்பதில் ஹனுமான் முக்கிய பங்கு வகித்ததாக நிகழ்வின் அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த சிலையை ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிஜி திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர்களும், புனித நீரும் தூவப்பட்டது.
அனுமனின் கழுத்தில் 72 அடி உயர மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இந்த சிலை அமெரிக்காவின் ஆன்மீக மற்றும் கலாச்சார உலகில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
Prana pratishtha held today in Houston, Texas for this 90ft tall Hanuman murthi
— Journalist V (@OnTheNewsBeat) August 19, 2024
It is now the 3rd tallest statue in the United States pic.twitter.com/N7sNZaikBF
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bronze Hanuman Statue Of Union Unveiled In Texas, Hanuman Statue in US