ChatGPT- யால் 90% வருமானத்தை இழந்துவிட்டேன்: மாணவி வேதனை
இந்திய மாநிலம் மேற்கு வங்காளதைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர் சாட் ஜிபிடி (ChatGPT) மூலம் தன்னுடைய 90 சதவீத வருமானம் குறைந்துள்ளதாக வேதனை அடைந்துள்ளார்.
90% வருமானம் குறைவு
இணையத்தில் தகவல் தேடுவதில் முன்னணியில் இருந்த கூகுள் தேடுபொறிக்கு போட்டியாக சாட் ஜிபிடி என்ற தேடு பொறியை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த ஓபன் ஏ.ஐ. என்ற நிறுவனம் அறிமுகம் செய்தது.
கொல்கத்தாவைச் சேர்ந்த 22 வயது மாணவி சரண்யா பட்டாச்சார்யா என்பவர், செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட் ChatGPT அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தனது வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.
அந்தவகையில் அவர், அவர், சாட் ஜிபிடி (ChatGPT) மூலம் தனது சம்பளம் 90% குறைந்துள்ளதாகவும், அதனால் அவரது குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சரண்யா பட்டாச்சார்யா தனது பட்டப்படிப்பைத் தொடரும் போது ஒரு நிறுவனத்தில் எழுத்தாளராக இருந்தார். அவர் சில எஸ்சிஓ கட்டுரைகளை எடுத்து ஒரு மாதத்திற்கு 240 அமெரிக்க டாலர்கள் வரை (தோராயமாக ரூ. 20,000) சம்பாதித்தார்.
ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சாட் ஜிபிடி மூலம் அவரது வருமானம் மிகவும் குறைந்துள்ளது.
எதிர்காலம் குறித்து மாணவி கவலை
சரண்யா பட்டாச்சார்யா கூறுகையில்,"2022 ஆம் ஆண்டின் இறுதியில், மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதும் அளவிற்கு தனது பணிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேலையின்மைக்கு எந்த விளக்கத்தையும் நிறுவனம் அளிக்கவில்லை" என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர்,"எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளில் பெரும்பான்மையான வேலைகளை சாட் ஜிபிடி தொழில்நுட்பம் செய்து முடிக்கிறது. இதனால், என் வேலை குறைக்கப்பட்டதால் எனது குடும்பம் பெரிதும் பாதித்துள்ளது" என கூறியுள்ளார்.
தனது எதிர்காலம் நிச்சயமற்ற தன்மையில் இருப்பதாக கூறும் சரண்யா, தான் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மனிதர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு செய்யும் வேலைகளுக்கு வித்தியாசம் இருக்கிறது என்றும், அதிகளவில் பணியாளர்களை நிறுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |