கோவிட் தொற்றால் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் 90 வீதம் பாதிப்பு
கோவிட் பெருந்தொற்று காரணமாக மேல் மாகாணத்தில் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் 90 வீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக பாடசாலை கற்றல் நடவடிக்கைகளில் எவ்வாறான இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய கல்வி நிறுவகத்தினால் இந்த ஆய்வு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் மேல் மாகாணத்தில் 55 வீதமான கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,ஏனைய மாகாணங்களில் இது 45 வீதமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் மேல் மாகாணத்தில் 90 வீதமான கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய மாகாணங்களில் 70 வீதமான கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ன தெரிவித்துள்ளார்.