நாடு கடத்தப்பட்ட 900 வெளிநாட்டவர்கள்... புலம்பெயர்ந்தோர் தொடர்பில் பிரித்தானிய உள்துறை செயலரின் அடுத்த கட்ட நடவடிக்கை
குற்றச்செயலில் ஈடுபட்ட 900க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஏற்கனவே 2021ஆம் ஆண்டில் பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய உள்துறை செயலரான பிரீத்தி பட்டேல் புலம்பெயர்ந்தோர் தொடர்பில் அடுத்ததாக மற்றொரு நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே, சட்டவிரோத புலம்பெயர்தலை முழுமையாக கட்டுப்படுத்தும் முயற்சியாக, 2025ஆம் ஆண்டு வாக்கில் டிஜிட்டல் விசாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும்.
அவை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவை காலாவதியானபின், அவற்றை வைத்திருப்பவர்கள் எவ்வித சலுகைகள், சேவைகளையும் பெற முடியாததுடன் வேலை செய்யவும் முடியாத ஒரு நிலையை உருவாக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளது.
தற்போது, கூடுதலாக வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகளுக்கு electronical tag என்னும் மின்னணு பட்டை அணிவிக்கும் ஒரு திட்டத்தை அறிவிக்க இருக்கிறார் பிரித்தானிய உள்துறை செயலரான பிரீத்தி பட்டேல். அதாவது, தங்கள் தண்டனைக்காலம் முடிந்த பின்னர் குற்றவாளிகள் தப்பி ஓடுவதைத் தடுப்பதற்காகவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதற்காகவும், இந்த மின்னணு பட்டை திட்டம் கொண்டு வரப்பட இருப்பதாக பிரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டில் 900 வெளிநாட்டுக் குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டுவிட்டார்கள். ஆனால், பலர் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் செல்லாமல் பிரித்தானியாவிலேயே தங்கி விடுவதால் சட்டச் சிக்கல்கள் உருவாகின்றன.
ஆகவே, சிறையிலிருந்து விடுவிக்கப்படுவோரின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக
மின்னணு பட்டை திட்டம் கொண்டு வர உள்ள பிரீத்தி பட்டேல், போதுமான GPS
kitகளையும் ஆர்டர் செய்துள்ளார் என The Sun பத்திரிகை தெரிவித்துள்ளது.