ஓட்டுநர் வங்கிக்கணக்கில் டெபாசிட் ஆன ரூ.9,000 கோடி .. TMB வங்கி சிஇஓ திடீரென ராஜினாமா
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார்.
TMB சிஇஓ ராஜினாமா
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் (TMB ) நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ பொறுப்பில் இருந்த எஸ்.கிருஷ்ணன் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இவருடைய ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாகக்குழு ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர், தனது ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். மேலும், இந்த தகவல் ரிசர்வ் வங்கிக்கும் முறைப்படி கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் சிறிய வங்கிகளில் சிறந்த வங்கியாகத் தேர்வு செய்யப்பட்டு விருதையும் இந்த வங்கி பெற்றிருந்தது.
ஓட்டுநர் வங்கிக்கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி
முன்னதாக, சென்னையில் வாடகை கார் ஓட்டிவரும் டிரைவர் ராஜ்குமார் என்பவரின் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கணக்கில், கடந்த செப்டம்பர் 9 -ம் திகதி மாலை 3 மணி அளவில் ரூ.9 ஆயிரம் கோடி தவறுதலாக டெபாசிட் ஆனது.
பின்னர், இவரது வங்கிக்கணக்கில் இருந்து வங்கிக்கே பணம் திரும்ப பெறப்பட்டது. இந்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |