90,000 யூரோக்கள் மதிப்புடைய உணவுப்பொருள் ஒன்றைத் திருடிச் சென்ற திருடர்கள்
பிரான்சில், 90,000 யூரோக்கள் மதிப்புடைய உணவுப்பொருள் ஒன்றைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
90,000 யூரோக்கள் மதிப்புடைய உணவுப்பொருள்
வட பிரான்சிலுள்ள Bouzy என்னுமிடத்தில் உணவுக்காக பயன்படுத்தப்படும் நத்தைகளை வளர்க்கும் பண்ணை ஒன்று அமைந்துள்ளது.

அந்தப் பண்ணையில், உயர் தர உணவகங்களுக்கு விநியோகிப்பதற்காக உயிருள்ள மற்றும் பதப்படுத்தப்பட்ட நத்தைகளை வைத்திருந்திருக்கிறார்கள்.
கடந்த திங்கட்கிழமை இரவு பண்ணைக்குள் நுழைந்த திருடர்கள், நத்தைகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடங்களுக்குள் நுழைந்து மொத்த நத்தைகளையும் திருடிச் சென்றுள்ளார்கள்.
திருடப்பட்ட நத்தைகளின் மதிப்பு, 90,000 யூரோக்கள் ஆகும்.
பொலிசார் இந்த திருட்டு தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், மீண்டும் தங்கள் பண்ணையில் நத்தைகளை சேகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிரான்ஸ் நாட்டவர்களுக்கு இந்த நத்தை உணவு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.
பொதுவாகவே பண்டிகைக் காலங்களில் இந்த நத்தை உணவுக்கு அதிக அளவில் தேவை இருக்கும் நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் இப்படி ஒரு திருட்டு நடந்துள்ளதால் தாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
என்றாலும், உங்கள் தேவைகளை சந்திப்பதற்காக நத்தைகளை சேமிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறோம் என, பண்ணை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |