90,000 கைதிகள் புனித நீராட மகா கும்பமேளா நீரை சிறைக்கு கொண்டு சென்ற அரசு
சிறையில் உள்ள 90,000 கைதிகள் புனித நீராட உத்தரபிரதேச மாநில அரசு மகா கும்பமேளா நீரை சிறைக்கு கொண்டு வந்துள்ளது.
கும்பமேளா நீரை சிறைக்கு கொண்டு சென்ற அரசு
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் திகதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தருகின்றனர். இதுவரை 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், உத்தரபிரதேச அரசு மாநிலம் முழுவதும் உள்ள 75 சிறைகளுக்கு மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திலிருந்து புனித நீரைக் கொண்டு வந்து கைதிகளை குளிக்க செய்துள்ளது.
இந்த புனித நீரானது வழக்கமான தொட்டிகளில் இருக்கும் நீருடன் கலக்கப்பட்டு கைதிகள் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இது தொடர்பாக உத்தரப் பிரதேச சிறை அமைச்சர் தாரா சிங் சவுகான் கூறுகையில், "மகா கும்பமேளாவில் 55 கோடி மக்கள் புனித நீராடி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்குள்ள கங்கா ஜலத்தைப் பயன்படுத்தி சுமார் 90,000 கைதிகளுக்கு புனித நீராட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |