பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 915 பேர் கொரோனவால் பலி! 7 வயது குழந்தையும் உயிரிழந்த துயரம்
பிரித்தானியாவில் கடந்த 24 நேரத்தில், 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதால், இதுவரை மொத்தம் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் இன்னும் பிரித்தானியாவில் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. சமீபத்தில் கூட, புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கடந்த 24 மணி நேரத்தில், 915 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இதன் மூலம் பிரித்தானியாவில் கொரோனாவால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தி பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில், 20364 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் மொத்தம் 3,892,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,
இன்றைய புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும் போது, நேற்று 1322 பேர் உயிரிழந்துள்ளனர். 19202 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இன்று உயிரிழந்த 915 பேரில், ஒரு ஏழு வயது குழந்தையும் அடங்கும்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இறப்புக்கான எண்ணிக்கை ஏழு நாள் வீதம் முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 16.6 சதவீதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் வாரத்தில் என்று பார்க்கும் போது வழக்குகள் 25 சதவீதம் குறைந்து வருகின்றன.
கடந்த ஜனவரி 31-ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களும் கிட்டத்தட்ட ஒரு காலாண்டிற்கு அளவான மக்கள் குறைந்துவிட்டனர்.
தற்போது இருக்கும் நிலையை பார்க்கும் போது, பிரித்தானியாவின் அனைத்து பகுதிகளிலும் நிலைமை மெதுவாக முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

