ஒரு வருடமாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த 91 வயது முதியவருக்கு கொரோனா: தொற்றியது எப்படி?
பாதுகாப்பு உணர்வு காரணமாக ஒரு வருடமாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்றியது எப்படி என எழுப்பப்பட்ட கேள்விக்கு, எதிர்பாராத ஒரு பதில் கிடைத்துள்ளது.
இங்கிலாந்திலுள்ள Bloxwich என்ற பகுதியில் வாழும் Peter Short (91), 2020 பிப்ரவரியிலிருந்து வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
ஆனால், தற்போது அவர் மருத்துவமனையில் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கிறார். கடந்த மாதம் 13ஆம் திகதி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கொரோனா தடுப்பூசி போடவைத்து அழைத்துவந்துள்ளார் அவரது மகன்.
ஜனவரி 16ஆம் திகதி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட Peterக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
மருத்துவமனையில் எல்லா பொருட்களும் கிருமிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தன் தாத்தா தொட்ட கிருமிநீக்கம் செய்யப்படாத ஒரே பொருள், ஆவணங்களை நிரப்ப அவர் பயன்படுத்திய பேனாதான் என்கிறார், Peterஉடைய பேத்தியான Emma Loundes.
அந்த பேனா மூலமாகத்தான் தன் தாத்தாவுக்கு கொரோனா பரவியிருக்கும் என நம்புகிறார் Emma. (கவனிக்கவேண்டிய விடயம்தான்!) பாதுகாப்பாக வீட்டுக்குள் இருந்தும் Peterக்கு கொரோனா தொற்று பரவியதால், அவரது குடும்பத்தார் மிகவும் வருத்தத்தில் உள்ளார்கள்.



