கனேடிய மாகாணமொன்றில் 92 பேர் கைது: விவரம் செய்திக்குள்
கனேடிய மாகாணமொன்றில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
92 பேர் கைது
கனேடிய மாகானமான ஒன்ராறியோவிலுள்ள Oshawa நகரின் Durham பகுதி பொலிசார், தாங்கள் 92 பேரைக் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் மீது 113 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 600,000 டொலர்கள் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
போதைப்பொருட்கள் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பில், ஐந்து வார விசாரணை ஒன்றிற்குப் பின் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக Durham பகுதி பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
எச்சரிக்கை
Oshawa மேயரான Dan Carter கூறும்போது, இந்த விசாரணை, நகரத்தில் வாழும் மக்களுக்கு ஒரு செய்தியை தெரிவிப்பதாக கூறுகிறார். அதாவது, நீங்கள் எங்கள் நகருக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்ய வந்தால், உங்களுக்கு இங்கு வரவேற்பில்லை என்பதுதான் அது என்கிறார் அவர்.
கனடா, நாளொன்றிற்கு 24 பேரை போதைக்கு பலிகொடுப்பதாக தெரிவித்துள்ள Dan Carter, இங்கே வீடற்ற, தங்க இடமில்லாத, எளிதில் பாதிக்கப்படும் அபாயத்தில் பலர் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்,
அவர்களுக்காக நாம் கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ளவேண்டியுள்ளது. என்றாலும், இப்போது நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, இந்த சமுதாயம் சட்டம் ஒழுங்கைப் பின்பற்றும் சமுதாயம் என்பதை உறுதிசெய்வதற்காக நாங்கள் எதையும் செய்வோம் என்பதையும், இந்த சமுதாயம் போதைப்பொருட்கள் விற்பனையை சகித்துக்கொள்ளாது என்பதையும் காட்டுவதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |