மின் துப்பாக்கியால் அவுஸ்திரேலிய பொலிஸ் தாக்கிய 95 வயது மூதாட்டி மரணம்
முதியோர் இல்லத்திற்குள் நுழைந்த அவுஸ்திரேலிய காவல்துறை அதிகாரியால் தாக்கப்பட்ட 95 வயதான மூதாட்டி, ஒரு வாரத்திற்குப் பிறகு உயிரிழந்தார்.
மின் துப்பாக்கியால் (Taser Gun) தாக்கப்பட்ட 95 வயது மூதாட்டி
சிட்னிக்கு தெற்கே 250 மைல் தொலைவில் உள்ள சிறிய நகரமான கூமாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் மே 17, புதன்கிழமை காலை நடந்த சம்பவத்தில், டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட 95 வயது மூதாட்டி Clare Nowland மீது அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரி ஒருவர் டேசர் துப்பாக்கியால் தாக்கினார். இச்சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டேசர் துப்பாக்கியால் தாக்கப்பட்டதால் மூதாட்டி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் நவ்லேண்ட் கூமா மருத்துவமனையில் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெறிவித்தனர்.
AP
இந்த சம்பத்தில், 12 வருட அனுபவமுள்ள சிரேஷ்ட கான்ஸ்டபிளாக இருந்த குறித்த அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மூதாட்டி மரணம்
இந்நிலையில், புதன்கிழமை (மே 24-ஆம் திகதி) மூதாட்டி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
"95 வயதான கிளேர் நவ்லேண்ட் இன்றிரவு கூமாவில் காலமானதை நாங்கள் மிகவும் வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம்" என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Clare Nowland
நவ்லேண்டிற்கு 24 பேரக்குழந்தைகள் மற்றும் 31 கொள்ளுப் பேரக்குழந்தைகள் இருந்ததாக காவல்துறை கூறுகிறது.
சம்பளத்துடன் இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர், ஜூலை 5-ம் திகதி நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.