பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்த 97 வயது மூதாட்டி
97 வயது மூதாட்டி, பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
விமான இறக்கை மேல் நடந்த 97 வயது மூதாட்டி
பிரித்தானியாவின் செல்டென்ஹாமைச் சேர்ந்தவர் 97 வயதான பெட்டி ப்ரோமேஜ் என்ற மூதாட்டி.

கடந்த ஆண்டு இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, செல்டென்ஹாம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
செல்டென்ஹாம் மருத்துவமனை ஊழியர்கள் தன்னை நன்றாக கவனித்து கொண்டதால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நிதிதிரட்டும் முயற்சியில் இறங்கினார்.

இதற்காக பறக்கும் விமானம் ஒன்றின் ரெக்கை மேல் நடந்துள்ளார்.
A 97-year-old British woman broke her own Guinness World Record for being the oldest female wing walker.
— ABC News (@ABC) August 6, 2026
"I'd just get bored of life otherwise," Betty Bromage, who has done six wing walks in the last decade, said. pic.twitter.com/n4OYn0jMZl
இதன் மூலம் விமான இறக்கையில் நடந்த மிக வயதான பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக 4 ஆண்டுகளுக்கு முன்னரே இதே சாதனையை படைத்த அவர், தற்போது தன்னுடைய சாதனையே முறியடித்துள்ளார். அதற்கு முன்னதாக 5முறை இவ்வாறு நடந்துள்ளார்.
எனக்கு நூறு வயதாகும்போது, நான் ஏதாவது சிறப்பான ஒன்றைப் பற்றி யோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |