9-ம் வகுப்பு மாணவர் வங்கிக்கணக்கில் திடீரென காண்பித்த ரூ.87 கோடி.., என்ன நடந்தது?
9 ஆம் வகுப்பு மாணவன் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.87 கோடி இருந்ததாக காண்பிக்கப்பட்டதால் அந்த மாணவன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ரூ.87 கோடி
இந்திய மாநிலமான பீகாரின் முசாபர்பூரில் உள்ள 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சைஃப் அலி. இந்த மாணவர் தனது வங்கிக் கணக்கைச் சரிபார்த்த பிறகு திடீரென கோடீஸ்வரராகியுள்ளார்.
அதாவது, உள்ளூர் சைபர் கஃபேவுக்கு மாணவர் சென்றிருந்த போது தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.500 எடுக்க முடிவு செய்துள்ளார். அப்போது, தனது வங்கிக்கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்று சரிபார்த்தபோது தான் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
அதாவது, அவரது வங்கிக்கணக்கில் ரூ.87.65 கோடி இருக்கிறதாக காண்பிக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்த மாணவர் மற்றும் கஃபே உரிமையாளர் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, தவறு என்று கருதி மீண்டும் கணக்கு இருப்பை சரிபார்த்தாலும், தொகை அப்படியே இருந்தது. பின்னர், வீட்டிற்கு ஓடி வந்து, தான் பார்த்ததை தனது தாயிடம் கூறியுள்ளார்.
பிறகு, பக்கத்து வீட்டுக்காரரின் உதவியுடன், வங்கி அறிக்கைக்காக வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு (சிஎஸ்பி) சென்றனர். ஆனால், அப்போது வங்கிக்கணக்கில் வெறும் ரூ.532 மட்டுமே இருந்தது.
இதனால், அவரது கணக்கு முடக்கப்பட்டது. இந்த நிகழ்வால் அதிர்ச்சியடைந்த சைஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் முறைகேடு குறித்து புகார் அளிக்க தங்கள் வங்கிக்குச் சென்றனர்.
அங்கு, கணக்கில் இருந்து பெரிய தொகை எடுக்கப்பட்டதை வங்கி அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். வங்கிகணக்கில் எப்படி இவ்வளவு தொகை தவறுதலாக வரவு வைக்கப்பட்டது என்பதைக் கண்டறிய விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக வங்கி அதிகாரிகள் இன்னும் தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை.
மோசடி செய்பவர்கள் மாணவர்களின் கணக்கை பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், மாணவரின் குடும்பத்தினர் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |