பிரித்தானியாவில் சிறாரிடம் முறைகேடான செயலில் ஈடுபட்ட 26 வயது இளம்பெண் கைது! பயிற்சி மையத்தில் நடந்த சம்பவத்தின் பின்னணி
பிரித்தானியாவில் பயிற்சி மையத்தில் வேலை செய்து வந்த 26 வயது பெண் சிறார் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
Leicestershire-ஐ சேர்ந்த 26 வயதான பெண் Buckinghamshireல் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் பணியாற்றி வந்தார்.
அங்கு இருந்த சிறார் ஒருவரிடம் முறைகேடான செயலில் அப்பெண் ஈடுபட்டிருக்கிறார்.
கடந்த 2019 மே 13ஆம் திகதியில் இருந்து 2020 ஜனவரி 31ஆம் திகதி வரை பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை அவர் மேற்கொண்டிருக்கிறார்.
இந்த விடயம் வெளியில் தெரியவந்த நிலையில் அப்பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
அவர் மீது சில முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
The offense of abusing a 26-year-old female child