14 வயதில் பிறந்தநாள் பரிசாக கிடைத்த 500 பவுண்டுகள்: இன்று பிரித்தானியாவின் பணக்காரர்களில் ஒருவர்
தனது பாட்டி, தனக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்த 500 பவுண்டுகளை முதன்முதலாக முதலீடு செய்த ஒருவர், இன்று பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
திகைத்த ரிசப்ஷனிஸ்ட்
BlueCrest Capital Management நிறுவனத்தின் லண்டன் தலைமையகத்திற்குள் வேகமாக நுழைகிறார் ஒருவர். அவர் வேகமாக அலுவலகத்திற்குள் செல்வதைக் கண்டு திகைப்படைகிறார் வரவேற்பு அலுவலகத்தில் பணியாற்றும் ரிசப்ஷனிஸ்ட்.
Image: LinkedIn
பிறகுதான் அந்தப் பெண்ணுக்குத் தெரியவருகிறது, அந்த நபர்தான் தனக்கு சம்பளம் கொடுக்கும் நிறுவனத் தலைவரான மைக்கேல் ப்ளாட் (Michael Platt, 56) என்பது.
அதாவது, மைக்கேல், அதிகமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கமாட்டாராம். அத்துடன், அவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதாம்.
சொத்து மதிப்பு
மைக்கேல் ஒன்றும் பிறவி கோடீஸ்வரர் அல்ல. தனது பிறந்தநாளுக்கு தன் பாட்டி பரிசாகக் கொடுத்த 500 பவுண்டுகளை முதன்முதலாக முதலீடு செய்துள்ளார் மைக்கேல். அப்போது அவருக்கு 14 வயது. பின்னர் கணிதம் பயின்று, பொருளாதாரம் பயின்று முதலீடுகள் செய்யத் துவங்கி 30,000 பவுண்டுகள் வரை வருவாய் ஈட்டியுள்ளார்.
Image: Internet Unknown
2000ஆவது ஆண்டில், மைக்கேலும் தொழிலதிபரான வில்லியம் ரீவ்ஸ் (William Reeves) என்பவரும் இணைந்து BlueCrest Capital Management என்னும் முதலீட்டு நிறுவனத்தைத் துவக்கியுள்ளார்கள்.
இன்று, அவரது சொத்து மதிப்பு 14.3 பில்லியன் பவுண்டுகள். பிரித்தானிய பனக்காரர்கள் பலரைப் பின்னுக்குத் தள்ளி, இன்று பிரித்தானியாவின் கோடீஸ்வர்களில் ஒருவராக முன்னணியில் வலம் வருகிறார் மைக்கேல்.
ஒரு சுவாரஸ்ய தகவல்
மைக்கேல் ஒருமுறை நியூயார்க்கில் டாக்சி ஒன்றில் பயணிக்கும்போது, டாக்சி சாரதி, நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என மைக்கேலிடம் கேட்க, அவர், நான் உலகில் அதிகம் சம்பாதிக்கும் நபர் என்று கூறியுள்ளார்.
உலக கோடீஸ்வரகளான பில் கேட்ஸ், எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் ஆலியோரை பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்கள் அல்லவா? அப்படியிருக்கும்போது, நான்தான் நான் உலகில் அதிகம் சம்பாதிக்கும் நபர் என்று முகம் தெரியாத ஒரு நபர் கூறினால் எப்படி இருக்கும்? ஆக, அந்த டாக்சி சாரதி கேலியாக பதில் கூற, அந்தக் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. பிறகு, நான் சும்மா வேடிக்கைக்காகத்தான் அப்படிச் சொன்னேன் என்று சப்பைக் கட்டு கட்டியுள்ளார் மைக்கேல்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |