பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த 17 மாத குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: விமான அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்ப்பு!
லிவர்பூல் பூங்காவில் ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை மாத ஆண் குழந்தையை ஒரு நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் பிர்மிங்காம் பகுதியில் 25 வயதான Keira Ladlow எனும் பெண் சொந்த வீட்டிலியேயே நாய் கடித்து குதறியதால் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதே போன்ற சம்பவம் ஒரு ஒன்றரை மாத குழந்தைக்கு நடந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தை உயிர்தப்பினார்.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரத்தில் Merseyside பகுதியில் உள்ளது மரியன் பூங்கா. அங்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.25 மணியளவில் ஒரு குழந்தை அலறும் சத்தம் கேட்டது.
அருகில் இருந்த மக்கள் பதறிப்போய் சென்று பார்த்தபோது, பூங்காவில் ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு 17 மாத ஆண் குழந்தையை நாய் கடித்து குதறியுள்ளது.
இதனால் குழந்தையின் காலில் படுகாயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தோடியுள்ளது. நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்றிய மக்கள் உதவிக்காக அவசர எண்ணை தொடர்புகொண்டனர்.
சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் அவசர ஊர்தி வந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில், காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக குழந்தை விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் அதிகாரிகள் உரிமையாளரை விசாரிப்பதற்காக நாயை கைப்பற்றி கொண்டு சென்றனர். மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.