சுவிஸ் தம்பதியரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து கொள்ளை: எல்லை தாண்டி ஓடிய கொள்ளையன்?
சுவிஸ் மாகாணமொன்றில், வயதான தம்பதியரை பிணைக்கைதிகளாக பிடித்து அவர்கள் வீட்டில் கொள்ளையடித்துள்ளனர் மூன்று பேர்.
இருவர் சிக்கினர் ஒருவர் தப்பியோட்டம்
ஜெனீவாவிலுள்ள Cartigny என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வயதான தம்பதியர் வாழ்ந்துவந்த நிலையில், மூன்று கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
அவர்களைப் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டு அந்த வீட்டிலுள்ள விலையுயர்ந்த பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
அந்த முதியவரின் காதைக் கொள்ளையன் ஒருவன் கத்தியால் கிழித்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டு தையல் போடும் நிலை ஏற்பட்டது.
image - Police GE
ஆனால், கொள்ளை நடந்து சில மணி நேரத்திற்குள்ளேயே மோப்ப நாய்கள் உதவியுடன் இரண்டு கொள்ளையர்களைப் பிடித்தனர் பொலிசார். அவர்கள் கொள்ளையடித்த பொருட்கள் அருகிலுள்ள ஒரு இடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவர் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான். அவன் எல்லையைக் கடந்து தப்பிச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.