வாசலில் வந்து நின்ற அழகிய இளம்பெண்... உண்மை தெரிந்ததும் நடுங்கிப்போன பிரித்தானியர் செய்த செயல்
இங்கிலாந்தில் தன் வீட்டு வாசலில் அழகிய இளம்பெண் ஒருவர் வந்து நிற்பதை, அங்கு பொருத்தப்பட்டுள்ள கமெரா மூலம் அறிந்துகொண்டார் பிரித்தானியர் ஒருவர்.
வாசலில் வந்து நின்ற அழகிய இளம்பெண்
இங்கிலாந்தில் வாழும் ராப் (Rob Williams, 39), தனது வாசலில் பொருத்தப்பட்டுள்ள கமெராவில் காணப்படும் காட்சிகளை தனது மொபைல் மூலம் பார்க்கும் வசதியை ஏற்படுத்திவைத்துள்ளார்.
கடந்த மாதம் 13ஆம் திகதி, தனது வாசலில் யாரோ நிற்பதாக தனது மொபைல் கூற, மொபைலை எடுத்துப் பார்த்த ராப், அங்கு ஒரு பெண் நிற்பதைக் கவனித்துள்ளார்.
செவிலியர்கள் அணியும் தொப்பி அணிந்து நின்ற அந்த பெண்ணின் உருவம், ராப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சட்டென மறைய, பயந்துபோன அவர், அன்று முழுவதும் மின்விளக்குகளை அணைக்காமலே படுக்கைக்குச் சென்றிருக்கிறார்..
Image: Kennedy News and Media
ஆவிகளுடன் பேசும் பெண் கொடுத்த கூடுதல் அதிர்ச்சி
ராப் இந்த காட்சிகளை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட, ஆளாளுக்கு அதைக் குறித்து ஒவ்வொரு கருத்தைக் கூறியுள்ளார்கள்.
அப்போது, ராபை ஒரு பெண் தொடர்புகொண்டுள்ளார். அவர் கூறிய விடயம் ராபை இன்னும் திகிலடையவைத்திருக்கிறது. அந்த பெண் ஆவிகளுடன் பேசுபவராம்.
ராப் கமெராவில் பார்த்த பெண்ணின் பெயர் ஹெலன் என்றும், அவர் ஒருவர் செவிலியர் என்றும், அவர் ஒரு பெரிய மருத்துவமனையில் பணியாற்றிவந்ததாகவும், அந்த மருத்துவமனை ராப் வாழும் வீட்டுக்கு அருகிலேயே இருப்பதாகவும் ஆவிகளுடன் பேசும் அந்த பெண் கூற, ராபின் பயம் அதிகமாகிவிட்டது!
Image: Kennedy News and Media