பிரான்ஸ் நாட்டு இளைய தலைமுறையினரின் கவனம் ஈர்த்துள்ள ஒரு அழகு தேவதை...
பிரான்ஸ் நாட்டு இளைய தலைமுறையினரின் கவனம் ஈர்த்துள்ளார் கூடைப்பந்து வீராங்கனையான ஒரு அழகு தேவதை.
அனுபவம் மிக்க விளையாட்டு வீராங்கனைகள் இல்லாத நிலையில், பிரான்ஸ் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்ற எண்ணம் மேலோங்கியிருந்த நிலையில், பிரான்ஸ் அவுஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளது.
2022 FIBA பெண்கள் உலகக்கோப்பை விளையாட்டில், அவுஸ்திரேலியாவுடன் பிரான்ஸ் மோதும் போட்டியில், பிரெஞ்சு ஜாம்பவான் Sandrine Gruda களமிறங்கவில்லை. Marine Johannesக்கும் காயம் ஏற்பட, அவராலும் போட்டியில் பங்கேற்க முடியவில்லை.
பிரான்ஸ் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்ற எண்ணம் மேலோங்கியிருந்த நிலையில், பிரான்ஸ் அவுஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளது.
அதற்கு முக்கிய காரணமாக இருந்த Gabby Williams இளைய தலைமுறையினரின் கவனம் ஈர்த்துள்ளார்.
image -twitter
26 வயதே ஆகும் Gabbyயின் முழுப்பெயர் Gabrielle Lisa Williams. அமெரிக்க பிரெஞ்சுக் குடிமகளான Gabbyயின் ஆட்டம் பிரான்சின் வெற்றிக்கு வழிவகுக்க, பிரான்ஸ் கூடைப்பந்து அணிக்கு அடுத்த தலைவர் கிடைத்துவிட்டார் என புகழாரம் சூட்டியுள்ளன ஊடகங்கள்.
அவரது அணியினரும் Gabbyயின் எழுச்சியைக் கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
Image - instagram
ஆனால், Gabbyயோ, எங்கள் அணித்தலைவியை இழந்த நிலையிலும், அணியினர் அனைவரும் முன்வந்து முதிர்ச்சியைக் காட்டி இந்த வெற்றியை பெற்றுத் தந்துள்ளார்கள் என்கிறார்.
இப்படி அதிக இளைஞர்களைக் கொண்ட ஒரு அணி இப்படி ஒரு வெற்றியைப் பெற்றுள்ளதைப் பார்க்கும்போது, கூடைப்பந்து விளையாட்டில் பிரான்சின் எதிர்காலத்தைக் குறித்த மிகப்பெரிய நம்பிக்கையை அது எனக்குக் கொடுத்துள்ளது என்கிறார் Gabby.