வலி தாங்க முடியாமல் ஆடுகளத்திலே கண்ணீர் விட்டு நட்சத்திர வீரர்.. இங்கிலாந்து அணிக்கு பெரிய இழப்பு!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கண்ணீர் விட்டு கலங்கிய காட்சி என்போரை கலங்க வைத்தது.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிப்பெற்றது.
எனினும், ஆஸ்திரேலியாவை விட குறைவான ரன் ரேட் இருந்ததால் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.
தற்போது, டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் தகுதி பெற்றுள்ளது.
இன்று நடைபெறும் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டியின் முடிவை பொறுத்து நான்காவதாக அரையிறுதிக்கு தகுதி பெறபோகும் அணி எது என்பது தெரியவரும்.
இந்நிலையில், தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜேசன் ராய், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆடுகளத்திலே சரிந்து வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கலங்கினார்.
இதன் பின் அவர் கைத்தாங்களாக ஆடுகளத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டார்.
No yaar ,Jason Roy ???.
— MD Shoaib? (@drewmaccynt) November 6, 2021
One more injury for England.
HOPE JASON ROY WILL FINE ?.#ENGvSA pic.twitter.com/i44G6y8Dt0
பின் போட்டி முடிந்ததும் ஊன்றுகோல் உதவியுடன் களத்திற்குள் வந்த ஜேசன் ராய், போட்டியில் வென்ற தென் ஆப்பரிக்கா அணியினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஜேசன் ராய் மீதமுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜேசன் ராய் விளையாடாத பட்சத்தில் இது இங்கிலாந்து அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.