சுவிட்சர்லாந்தில் ஒரு விநோத பார்சல் மோசடி: அமைச்சர் தெரிவித்துள்ள தீர்வு
சுவிட்சர்லாந்தில் நீண்ட காலமாகவே ஒரு விநோத மோசடி நடந்துவருகிறது.
பார்சல் மோசடி
சுவிட்சர்லாந்தில் அமேசான் போன்ற சில நிறுவனங்கள், பொதுமக்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை ஒப்படைத்துவிட்டு, பின்னர் பணம் பெற்றுக்கொள்ளும் ஒரு முறைமையை பின்பற்றுகின்றன.
அதாவது, நீங்கள் ஒரு பொருளை ஆர்டர் செய்தால், அந்த பொருளும், அதற்கான பில்லும் உங்கள் போஸ்ட் பாக்சில் கொண்டு வைக்கப்படும்.
அதை தெரிந்துகொள்ளும் மோசடியாளர்கள், நைஸாக அந்த பார்சலை மட்டும் எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். அதாவது, பார்சலும் கிடைக்காமல், அந்த பார்சலுக்கு பணம் மட்டும் செலுத்தும் நிலைக்கு ஆளாகிறார்கள் அதை ஆர்டர் செய்தவர்கள்.
அமைச்சர் தெரிவித்துள்ள தீர்வு
இந்த பிரச்சினைக்கு பொருளாதாரத்துறை அமைச்சர் Guy Parmelin தீர்வு ஒன்றைக் கூறியிருக்கிறார்.
அதாவது, இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த பார்சலுக்கு பணம் செலுத்தவேண்டாம் என்று கூறியுள்ளார் அவர்.
இதுபோன்ற மோசடியால் தங்கள் பார்சலை இழந்தவர்கள், பொலிசாரிடம் புகார் ஒன்றை பதிவு செய்யுமாறும், இது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் குறைதீர்க்கும் அதிகாரியை அணுகுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.
கடந்த ஆண்டில் மட்டும், அதுவும் சுவிட்சர்லாந்தில் பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியில் மட்டும், இதுபோல் சுமார் 1,000 பேர் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
image - Pixabay