சுவிஸ் மாகாணம் ஒன்றில் உலாவரும் நீல நிற மனிதர்... மருத்துவர்கள் எச்சரிக்கை
சுவிஸ் மாகாணம் ஒன்றில், நீல நிறத் தோலுடன் வலம் வரும் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Jura மாகாணத்தில்தான் இந்த நீல நிறத் தோல் கொண்ட மனிதர் காணப்படுகிறார். உண்மையில், அவருக்கு வெள்ளித்துகள்களால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
புண்கள் போன்ற சில குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு சில நாடுகளில் சில்வர் நைட்ரேட் என்னும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சுவிட்சர்லாந்தில் அந்த மருந்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிலர், இந்த வெள்ளித்துகள்கள் நோய்த்தொற்றுக்கு எதிராக செயல்படும் என்கிறார்கள். இந்த குறிப்பிட்ட நபரும் தன்னை வைரஸ்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்வதற்காக அந்த மருந்தை எடுத்துக்கொண்டுள்ளார்.
ஆனால், அந்த வெள்ளித்துகள்கள் நச்சுத்தன்மையை ஏற்படுத்தியதால், அவரது தோல் நீல நிறமாக மாறிவிட்டது. வாழ்நாள் முழுவதும் அவர் நீலத்தோலுடன்தான் இருப்பார் என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். அத்துடன், அவரது உடல் உள்ளுறுப்புக்கள் சிலவும் சேதமடைந்து விட்டன.
ஆகவே, எக்காரணம் கொண்டும் வெள்ளிப்பொடியை மருந்தாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.