ஆறு மணி நேரம் ட்ராமில் பயணித்த ஒரு உடல்... மனசாட்சியை உலுக்கும் ஒரு செய்தி
சுவிட்சர்லாந்தில் ட்ராமில் பயணிக்கும்போது உயிரிழந்த ஒருவரின் உடல், ஆறு மணி நேரம் வரை கவனிக்கப்படாமல் விடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரிச்சில் 64 வயது நபர் ஒருவர் ட்ராம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கும்போது திடீரென உயிரிழந்துள்ளார்.
ஆறு மணி நேரம் அவரது உடல் ட்ராமிலேயே கிடந்த நிலையில், சக பயணிகள் யாரும் அதை கவனித்ததாக தெரியவில்லை. நகரம் முழுவதும் ட்ராம் பயணித்த நிலையில், போக்குவரத்து அலுவலர்கள் கூட அவர் இறந்துகிடந்ததை கவனிக்கத் தவறியது எப்படி என அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
இந்த செய்தியை தாங்கள் உலகுக்கு தெரியப்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், அப்படியாவது மனிதர்களுக்கு சக மனிதர்களைக் குறித்த விழிப்புணர்வு உருவாகட்டும் என்கிறார்கள்.
மனிதர்கள் தங்களை மட்டுமே மையப்படுத்தி வாழ்கிறார்கள் என்று கூறும் அந்த
மனிதரின் மகன், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூட அவர்கள்
கவனிப்பதில்லை என்கிறார்.
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை என்று
கூறியுள்ளார்கள்.