வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த பெட்டி: திறந்ததும் அலறியடித்து ஓடிய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்
பிரித்தானிய ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீட்டு வசாலில் ஒரு பெட்டி வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
அதைத் திறந்து பார்த்த அந்தப் பெண் மூக்கையும் வாயையும் பொத்திக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
பிரித்தானியாவின் Gloucestershire நகரிலுள்ள Stroud தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Siobhan Baillie, அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் அருவருப்பான பிரச்சினைகளால் அரசியலில் ஈடுபடுவதற்கே, ஒன்றிற்கு இரண்டுமுறை யோசிக்கவேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
அதற்குக் காரணம், அவர் சமீபத்தில் எதிர்கொண்ட அருவருப்பான ஒரு விடயம்.
ஆம், கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Baillieயின் வீட்டு வாசலில் ஒரு பெட்டி வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
Source: news.sky.com
அது என்னவென பார்த்த Baillie, நாற்றம் தாங்காமல் மூக்கைப் பொத்திக்கொண்டு, வாந்தியை அடக்க வாயையும் பொத்திக்கொண்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கிறார்.
அந்த பெட்டியில் இருந்த பொருள் மனித மலம்!
இந்த மோசமான சம்பவம் தொடர்பாக, பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
Baillie இப்படி எதிர்ப்புகளை சந்திப்பது இது முதல் முறையல்ல, ஏற்கனவே, பிரசவ விடுப்பு எடுத்ததற்காக அவரைக் குறிவைத்து கோப மின்னஞ்சல்கள் பல அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.