அபாயகரமாக விமான சக்கரத்தில் மறைந்து லண்டலிருந்து நெதர்லாந்து பயணித்த சிறுவன்! எப்படி? உறைந்து போன அதிகாரிகள்
லண்டனில் இருந்து நெதர்லாந்தில் உள்ள மாஸ்ட்ரிக்ட் விமான நிலையத்திற்கு பறந்த விமானத்தின் சக்கரத்தில் மறைந்து பயணித்த சிறுவன் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை லண்டனில் இருந்து மாஸ்ட்ரிச்சிற்கு துருக்கிய ஏர்லைன்ஸால் இயக்கப்படும் ஏர்பஸ் ஏ-330 சரக்கு விமானம் மட்டுமே பறந்தது.
வியாழக்கிழமை பிற்பகல் விமானம் தரையிறங்கிய பின் தரையிறங்கும் கியருக்கு அருகே உள்ள இடத்தில் மறைந்திருந்த சிறுவன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
சிறுவன் கடுமையான hypothermia பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சிறுவன் உயிர்பிழைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். தரையிறங்கும் கியருக்கு அருகே மறைந்து செல்லும் நபர்கள் பொதுவாக உறைந்து இறப்பார்கள் அல்லது கீழே விழுவார்கள் என்று மாஸ்ட்ரிக்ட் ஆச்சென் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
விமானத்தில் மறைந்து சென்றவர் கென்யாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என எல்லை பொலிசார் வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரிவித்தனர்.
சிறுவன் மருத்துவமனையில் ‘நல்ல முறையில் சிறப்பாக இருக்கிறார் என பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.