மேற்படிப்புக்கு தடை போட்ட மாப்பிள்ளை.., தாலி கட்டும் நேரத்தில் வேண்டாம் என தடுத்த மணப்பெண்
மேற்படிப்பு முக்கியம் எனக் கூறி திருமணத்தின் போது தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் தடுத்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
திருமண முடிவு
இந்திய மாநிலமான கர்நாடகாவில், சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு 6 மாதத்திற்கு முன்பே இரு வீட்டாரும் திருமண பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த மாதம் பேச்சுவார்த்தை முடிந்து டிசம்பர் 7 -ம் திகதி திருமணம் நடைபெற முடிவெடுக்கப்பட்டது. பின்னர், மண்டபம், பத்திரிகை அடித்தல், உறவினர்கள் அழைப்பு என திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றது.
பெண்ணின் செயல்
இந்நிலையில், திருமணம் நடைபெறும் போது மணமகன் மஞ்சுநாத் தாலி கட்ட வரும் நேரத்தில், மணமகள் ஐஸ்வர்யா அதனை தடுத்துள்ளார். அப்போது, உறவினர்கள் மணமகளை சமாதானப்படுத்தியும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
உடனே, மணமகனை பார்த்த அவரது பெற்றோர் அவரை அழைத்துச் சென்றனர். பொலிஸார் முன்னிலையில் மணமகளின் விருப்பத்துக்கு மாறாக நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
இதனால், மணமகன் வீட்டாரின் திருமண செலவுகள் அனைத்தையும் மணமகள் வீட்டார் ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டனர்.
படிப்பு முக்கியம்
மேற்படிப்புக்காக திருமணத்தை நிறுத்தியதாக மணமகள் கூறியுள்ளார். திருமண பேச்சு ஆரம்பித்த நேரத்தில் ஐஸ்வர்யாவின் மேற்படிப்புக்கு மாப்பிள்ளை வீட்டார் தடை போடவில்லை. ஆனால், திருமணம் நெருங்கும் சமயத்தில் ஐஸ்வர்யா கல்லூரி செல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.
நெறையா கேள்விகள் மனசுல ஓடுது… pic.twitter.com/pPNuUUkD8C
— s!d ✨ (@SidTweep) December 8, 2023
இதில், தாலிகட்டும் கடைசி நேரம் வரை வரை மாப்பிள்ளையின் பதிலை மணப்பெண் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், மாப்பிள்ளை எந்தவொரு பதிலையும் கூறாததால் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
தற்போது, இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒருபுறம், ஐஸ்வர்யாவின் முடிவை சிலர் எதிர்த்தாலும், ஒரு சிலர் அவரை பாராட்டி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |