பள்ளிப்பருவத்திலிருந்தே காதலித்த பெண்ணை சமீபத்தில் பிரிந்த பிரித்தானியர்: கைநழுவிப்போன லொட்டரி பரிசு...
பள்ளிப்பருவத்திலிருந்தே தன் பள்ளித்தோழியை விரும்பிவந்துள்ளார் பிரித்தானியர் ஒருவர்.
ஆனால், சமீபத்தில் இருவரும் பிரிந்த நேரத்தில் அவரது காதலிக்கு பெருந்தொகை லொட்டரியில் பரிசாக கிடைத்துள்ளது.
பள்ளிப்பருவத்திலிருந்து ஆசைப்பட்ட பெண்ணை காதலித்துவந்த பிரித்தானியர் ஒருவர், சமீபத்தில் தன் காதலியைப் பிரிந்ததை எண்ணி நொந்துபோயிருக்கிறார்.
வேல்ஸில் வாழும் Daniel Whiteம், Courtney Daviesம் பள்ளிப்பருவம் முதலே ஒருவர் மீது ஒருவர் ஆசை வைத்திருந்தவர்கள்.
பின்னர் இரண்டு வருடங்கள் இருவரும் காதலித்த நிலையில், சில மாதங்கள் முன்பு Daniel தன் பள்ளிப்பருவக் காதலியான Courtneyயை பிரிந்திருக்கிறார்.
image: Matthew Horwood/Wales News Service
இந்நிலையில், ஒரு நாள் Danielக்கு தொடர்ந்து மொபைலில் அழைப்புகள் வந்துள்ளன. அவரது நண்பர்கள் பலர் அவரை அழைக்க, என்ன விடயம் என கேட்டிருக்கிறார் அவர்.
நீ Courtneyயை பிரிந்தது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா என்று கேட்டு நண்பர்கள் Danielஐத் திட்டியிருக்கிறார்கள்.
என்ன நடந்தது என கேட்க, அப்போதுதான் நண்பர்கள் விடயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, Courtneyயின் சகோதரியான Stephanieக்கு லொட்டரியில் 61 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.
Image: Wales News Service
அந்த பரிசை குடும்பத்தில் அனைவருடனும் பகிர்ந்துகொண்டுள்ளார் Stephanie. Stephanieயின் காதலருக்கும் 12 மில்லியன் பவுண்டுகளைக் கொடுத்துள்ளார் அவர்.
ஆக, Daniel, Courtneyயைப் பிரியாமல் இருந்திருந்தால் அவரது தலைவிதியே மாறியிருக்கும். இப்போது காதலியைப் பிரிந்ததால் அந்த அதிர்ஷ்டத்தை அவர் இழந்துவிட்டார் என்று சொல்லி நண்பர்கள் ஆளாளுக்கு திட்ட, தலையில் கைவத்தபடி அமர்ந்துவிட்டார் Daniel.
Image: X03075