இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரித்தானியர்: புகைப்படம் எடுக்கும்போது நேர்ந்த பயங்கரம்
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரித்தானியர் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாராத விபத்தொன்றில் உயிரிழந்தார்.
எதிர்பாராத பயங்கரம்
இங்கிலாந்தைச் சேர்ந்த Ivan Dennis Brown (71), தன் நண்பரான John David என்பவருடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். Dalhousie என்னும் இடத்தைப் பார்ப்பதற்காக இருவரும் சென்றுள்ளனர்.
நேற்று காலை 9.00 மணியளவில், புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த Ivanஉடைய கை, அந்தப் பகுதியில் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. அதில் சம்பவ இடத்திலேயே Ivan உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவம் குறித்து பிரித்தானிய தூதரகத்துக்கு தகவலளிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா வந்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.