இலங்கையில் பிறந்த பிரித்தானிய பெண்: மறக்க முடியாத நினைவுகள்...
இலங்கையில் பிறந்த பிரித்தானியப் பெண் ஒருவர் இன்று தனது 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அவருடைய மறக்க முடியாத நினைவுகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறது அவருடைய குடும்பம்.
Iona Baxter, 1922ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 25ஆம் திகதி இலங்கையில் பிறந்தார்.
குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், அன்று இலங்கை சிலோன் என அழைக்கப்பட்டது!
ஒரு வயதாகும்போது கொல்கொத்தாவுக்கு குடிபெயர்ந்தது Ionaவின் குடும்பம். அப்போது கொல்கத்தா, கல்கத்தா என அழைக்கப்பட்டது. உறைவிடப்பள்ளி ஒன்றில்தான் Ionaவும் அவரது சகோதர சகோதரிகளும் படித்தார்கள். Ionaவுக்கு மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள்.
Iona Baxter is celebrating her 100th birthday
விடுமுறை நாட்களின்போது கூட Ionaவும் அவரது உடன்பிறந்தவர்களும் பள்ளியிலேயேதான் தங்கியிருப்பார்களாம். காரணம், வீட்டுக்குச் செல்லும் அளவுக்கு அவர்களுக்கு பண வசதி இருந்ததில்லையாம். ஆனாலும் Iona மகிழ்ச்சியாகவே இருந்திருக்கிறார்.
யுத்தத்தின்போது, ஒரு இளம்பெண்ணாக, கொல்கத்தாவில் அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றிய Iona, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த பயங்கரங்களையும் கண்டிருக்கிறார்.
1946ஆம் ஆண்டு, Charles Baxter என்பவரை மணந்துகொண்டு Arthur என்ற மகனையும், Jayne என்ற மகளையும் பெற்றெடுத்திருக்கிறார் அவர். அவருடைய பிள்ளைகள் இருவரும் குடும்பத்துடன் இப்போது அமெரிக்காவில் வாழ்கிறார்கள்.
Iona pictured with her family
1960இல்தான் பிரித்தானியாவுக்கு வந்திருக்கிறார்கள் Ionaவும் Charlesம். அன்று Yeadon விமான நிலையம் என அழைக்கப்பட்ட இன்றைய Leeds Bradford விமான நிலையத்தில் காலடி எடுத்துவைத்திருக்கிறார்கள் தம்பதியர்.
பல பிரபல நிறுவனங்களில் பணியாற்றி, இறுதியாக கணவருடன் Bradfordஇல் குடியமர்ந்திருக்கிறார் Iona. அவருக்கு நான்கு பேரப்பிள்ளைகளும், அவர்களுக்கு ஏழு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
இன்று அவர்கள் அனைவரும் இணைந்து, தங்கள் பாட்டியின் 100ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட இருக்கிறார்கள்.
Iona and her husband