பிரித்தானியர்கள் தன் தாத்தாவை அடிமையாக வைத்திருந்ததை அறிந்த இந்திய வம்சாவளி கனேடியர் எடுத்த அதிரடி முடிவு
பிரித்தானிய கனேடிய இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவர், தான் பிரித்தானிய குடியுரிமை கொண்டவன் என்ற கௌரவத்துடன் வாழ்ந்துவந்துள்ளார்.
ஆனால், தன் மூதாதையர்கள் குறித்த ஒரு உண்மையை அவர் அறிந்தபோது, அதிரடி முடிவொன்றை எடுத்தார்.
Ben Samarooவின் பெற்றோர் லண்டனில் சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.
பின்னர் 1989ஆம் ஆண்டு, கல்வி மற்றும் பிற வாய்ப்புகளுக்காக அவர்கள் கனடாவுக்குக் குடிபெயர்ந்துள்ளார்கள்.
Submitted by Ben Samaroo
1994ஆம் ஆண்டு Ben Samaroo குடும்பத்துக்கு கனேடிய குடியுரிமை கிடைத்துள்ளது.
வளர வளர, Ben Samarooக்கு தனது மூதாதையர்களைக் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 10ஆண்டுகளாக முயற்சி செய்து தன் மூதாதையர்கள் குறித்து அவர் தெரிந்துகொண்டபோது, சில கசப்பான உண்மைகள் அவருக்குத் தெரியவந்துள்ளன.
ஆம், Ben Samarooவின் தாத்தா, ஒரு அடிமையாக பிறந்துள்ளார். அதாவது, இந்தியர்களான அவரது பெற்றோரை இந்தியாவிலுள்ள ஒரு சிறு கிராமத்திலிருந்து, நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருவதாக பொய் சொல்லி பிரித்தானியர்கள் கரீபியன் தீவுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.அங்கு அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை கரும்புத் தோட்டங்களில் அடிமையாக வேலை செய்வது.
Submitted by Ben Samaroo
அத்துடன், பொய் சொல்லி, புரியாத மொழியில் எழுதப்பட்ட ஒப்பந்தங்களிலும் கையெழுத்து வாங்கியுள்ளார்கள் அவர்கள். அதனால், நீண்ட காலமாக அடிமைகளாகவே வாழ்ந்திருக்கிறார்கள் அவர்கள்.
ஆக, பிரித்தானியர்கள் தன் மூதாதையர்களை பொய் சொல்லி ஏமாற்றி அடிமைகளாக்கியிருக்கிறார்கள் என்ற உண்மை Ben Samarooவுக்குத் தெரியவந்ததும், இதுவரை தான் பிரித்தானியக் குடியுரிமை கொண்டவன் என்ற கர்வமெல்லாம் கலைந்துபோய், பிரித்தானியர்கள் மீது கோபம் வந்திருக்கிறது.
அதுவும் மகாராணியார் மறைவுக்குப்பின் சார்லஸ் மன்னரானபோது, உலக நாடுகள் பல, காலனி ஆதிக்கத்தை, பிரித்தானியா தங்களை அடிமைகளாக வைத்திருந்தபோது செய்த அராஜகங்களை மீண்டும் நினைவுகூர்ந்துள்ளன.
Guyana National Archives
சில நாடுகளோ, மகாராணியாருக்குப் பிறகு மன்னரை தங்கள் நாட்டின் தலைவராக ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
ஆனால், தான் அந்த தவறைச் செய்ய விரும்பவில்லை என்கிறார் Ben Samaroo.
முதல் வேலையாக, வான்கூவரிலுள்ள பிரித்தானிய தூதரகத்துக்குச் சென்று, தான் தனது பிரித்தானிய குடியுரிமையைத் துறக்கும் ஆவணங்களைக் கையளித்துவிட்டு வெளியேறியதாக தெரிவிக்கிறார் அவர்.
அந்த ஆவணங்களைத் தான் தூதரக அலுவலரிடம் கையளித்தபோது தனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை என்று கூறும் Ben Samaroo, ஆனால், அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்து சூரியனின் ஒளி முகத்தில் பட்டதும், தன் மூதாதையர்களை அடிமைகளாக வைத்திருந்த ஒரு நாட்டின் குடியுரிமையை, தனது மூதாதையர்களுக்காக தான் துறந்ததை எண்ணும்போது, மனதில் ஒரு பெருமையையும், தன் காயங்கள் ஆறியதுபோன்ற ஒரு உணர்வையும் தான் அனுபவித்ததாக தெரிவிக்கிறார் அவர்.
Submitted by Ben Samaroo
Submitted by Ben Samaroo