தோட்டத்தில் கேட்ட பறவைகள் சத்தம்... கனேடியருக்கு காணக்கிடைத்த அபூர்வ காட்சி
கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் வாழ்பவர் Bill Gill. ஒரு நாள் அவரது வீட்டுத் தோட்டத்தில் பறவைகளின் சத்தம் கேட்டுள்ளது. இரண்டு பறவைகளின் சத்தம் கேட்டு அங்கு சென்ற Billக்கு ஒரு ஆச்சரிய காட்சி காத்திருந்தது.
ஆம், அங்கே இரண்டு தலைகள் உள்ள கௌதாரி ஒன்று இரை மேய்ந்துகொண்டிருந்திருக்கிறது.
அதன் இரு தலைகளும் தனித்தனியாக சாப்பிடுவதைக் கண்ட Bill, ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார்.
தனது வீட்டை அந்த இரண்டு தலை கௌதாரி இரண்டு முறை சந்தித்ததாக கூறும் Bill அதை புகைப்படம் எடுத்திருந்தாலும், அடுத்த முறை அது வரும்போது வேறு யாராவது அதைப் பார்த்தால் நம்புவார்கள் என்று கருதுகிறார்.
ஆனால், இரண்டு தலை விலங்குகள் சாத்தியமே என்கிறார் பேராசிரியர் Leslie MacLaren.
அது அபூர்வம்தான், ஆனாலும் நம்ப முடியாத விடயம் அல்ல என்று கூறும் MacLaren, இரண்டு தலை பாம்புகள், இரண்டு தலை பூனைகள் கூட ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளதாக கூறுகிறார். அவை ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக இருக்கும் என அவர் கருதுகிறார்.